ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

🕔 January 30, 2020

க்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்த சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் மீண்டும், செயற் குழுவுக்கு தெரிவு செய்யப்படவில்லை என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு சஜித் பிரேமதாஸ அணியைச் சேர்ந்தவர்கள் பலர் சமூகமளிக்கவில்லை.

ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என, அந்தக் கட்சிக்குள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தோருக்கு, இன்றைய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments