லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை

🕔 December 19, 2019

ஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை வந்தபோது, நீதிபதிகள் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவர் அடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அந்தவகையில் பேராசிரியர் மஹனாமாவுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 65,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பியதாச திஸாநாயக்கவுக்கு 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்