முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

🕔 November 19, 2019

– மரைக்கார் –

னாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர் என பலர் கலந்து கொண்டார்கள்.

இங்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலில், தான் ஆதரித்த வேட்பாளர் சஜித் பிரேமதாஸ படு தோல்வியடைந்தமையை அடுத்து, இவ்வாறானதொரு உயர்பீடக் கூட்டத்தை ஏற்பாடு செய்த ரஊப் ஹக்கீம்; எந்த ஜனாதிபதி வேட்பாளரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதென்பதை, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தை அழைத்து – ஏன் ஆலோசனை கேட்கவில்லை.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை யாருக்கு வழங்குவது, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது போன்ற, ‘பணப் புழக்கம்’ கொண்ட விடயங்களில் தனித்து முடிவுகளை மேற்கொள்ளும் மு.கா. தலைவர்; அவரின் தோல்விகளை மட்டும் அடுத்தவரின் தலைகளில் சுமத்தி விடுவதற்காக மட்டும் இவ்வாறான உயர்பீடக் கூட்டங்களைக் கூட்டி பாசாங்கு காட்டுவது, அடுத்தவரை முட்டாளுக்கும் செயற்பாடாகும்.

இதன்மூலம் கட்சி ஆதரவாளர்களை மட்டுமன்றி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களையும் ரஊப் ஹக்கீம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் தவறான முடிவினை எடுத்தமை காரணமாக, முஸ்லிம் சமூகத்தை நடுத்தெருவில் ரஊப் ஹக்கீம் நிறுத்தி விட்டதை, இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் தட்டிக் கேட்கும் அளவுக்கு, சமூக அக்கறையுடைய தைரியசாலிகள் எவரும் இருக்கவில்லை என்பது இன்னொருபுறம் வேதனையான விடயமாகும்.

தனது தோல்வியை பூசி மெழுகுவதற்கும், இந்த அரசாங்கத்தில் ஓடிப்போய் ஒட்டிக் கொள்வதற்குரிய நியாயத்தைக் கூறுவதற்குமான சந்தர்ப்பமாக, இன்றைய உயர்பீடக் கூட்டத்தை ஹக்கீம் பயன்படுத்தியிருப்பார். வேறென்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்