நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம்; நீங்கள் எங்களைத் தோற்கடித்தீர்கள்: இப்போது எங்கள் முறை

🕔 November 3, 2019

– டொக்டர் ஆகில் அஹமட் (பேஸ்புக் பக்கத்திலிருந்து…) –

ராஜக்ஷகளை தோற்கடிக்க வேண்டும், அவர்கள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டும்.

உண்மைதான். அதைத்தானே 2015ம் ஆண்டில் செய்தோம்.

விடியலுக்கு முன்னரே மாளிகையை விட்டுக் கிளம்பவில்லையா? எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆகாமல் ஆக்கவில்லையா? செய்தோம்தானே.

செத்த பாம்புகளாக ஆனவர்களுக்கு உயிரூட்டியது யார்? படமெடுத்தாடும் அளவுக்கு உரமூட்டியது யார்?

நாங்கள் தோற்கடித்து வீட்டுக்கனுப்பினோம், நீங்கள் கூட்டி வந்து தேன்நிலவு கொண்டாடினீர்கள். மீண்டும் நாங்களே தோற்கடிக்க வேண்டும் என்கின்றீர்கள். எதற்கு நாங்கள் ராஜக்ஷகளை தோற்கடிக்க வேண்டும்? மீண்டும் நீங்கள் தேன்நிலவு கொண்டாடுவதற்கா?

2015ல் தோற்கடிக்க வேண்டும் என்றீர்கள். அதில் ஒரு லாஜிக் இருந்தது. 2019 லும் தோற்கடிக்கச் சொல்கின்றீர்கள். இதில் லாஜிக் இல்லையே.

ராஷஜபக்ஷகளைத் தோற்கடித்து அதிகாரத்தை உங்களிடம்தானே கையளித்தோம். நாங்கள் தந்த அதிகாரத்தைக் கொண்டு எங்களை நீங்கள் தோற்கடித்தீர்கள்.

இப்போது எங்கள் முறை. நாங்கள் தோற்கடிக்க வேண்டியது ராஜபக்ஷகளை அல்ல; உங்களை.

Comments