நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது

🕔 October 17, 2019

வன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போது இவரை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையை நிஸங்க சேனாதிபதி மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் சிங்கப்பூரில் இருந்தவாறே – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தில்ருக்ஷ டயஸ் விக்ரமசிங்க, தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments