அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும்

🕔 March 13, 2019

– மரைக்கார் –

முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர், அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா.

அரச நிர்வாக சேவையில் இவரை விடவும் மூத்த முஸ்லிம்கள் உள்ளபோதும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக சில மாதங்களுக்கு முன்னர் ஹனீபா நியமிக்கப்பட்டார்.

ஹனீபாவை விடவும் அரச நிருவாக சேவையில் மூப்புடைய முஸ்லிம் ஆசாமி ஒருவருக்கு, அரசாங்க அதிபராக ஹனீபா நியமிக்கப்பட்டமை தொடர்பில் நிறையவே வயிற்றெரிச்சல் என்பதாகக் கேள்வி.

ஹனீபாவுக்கு வழங்கப்பட்ட அரசாங்க அதிபர் நியமனம், சீனியரான தனக்கே கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான், மேற்படி நபரின் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகும்.

அரசாங்க அதிபராக ஹனீபா நியமிக்கப்பட்டமை தொடர்பில் – தனக்குள்ள வயிற்றெரிச்சலை, குறித்த ஆசாமி – பல இடங்களில் வெளிக்காட்டியுமுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றில், மேற்படி சீனியர் ஆசாமி மற்றும் அரசாங்க அதிபர் ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விழாவில் சீனியர் ஆசாமியும் உரையாற்றினார். அதன்போது, அங்கிருந்த அமைச்சர் தொடக்கம், மேடையில் இருந்த எல்லோரையும் பெயர் சொல்லி விளித்த சீனியர் ஆசாமி, அரசாங்க அதிபர் ஹனீபாவை விளிக்காமல் விட்டு விட்டார்.

இதில் பகிடி என்னவென்றால், மேற்படி சீனியர் ஆசாமியின் வயிற்றெரிச்சல் குறித்து ஏற்கனவே தெரிந்திருந்த அந்த விழாவில் கலந்து கொண்ட சிலர்;  அவர் உரையாற்ற எழுந்த போதே, ‘அரசாங்க அதிபர் ஹனீபாவை விளிக்க மாட்டார்’ என்பதை, முன்கூட்டியே ஊகித்துப் பேசிக் கொண்டனர்.

இத்தனைக்கும், அரசாங்க அதிபர் ஹனீபாவுடன் – குறித்த சீனியர் ஆசாமி, நண்பர் போல் பேசுகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்