430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

🕔 May 29, 2015

ரு மனிதர் – மற்றொரு மனிதரைதாக்கப்பட்ட மண்டையோடு - 01, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு தாக்கிய, மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை – தாம் கண்டுபிடித்துள்ளதாக, மானுடவியல் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே,  மேற்படி விடயத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மண்டையோடு நான்கு லட்சத்தி முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரது மண்டை ஓடு என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

குறித்த மண்டையோட்டில் – இரண்டு எலும்பு முறிவுகள் காணப்பட்டதாகவும், ஒரே பொருளால் அது பலமுறை தாக்கப்பட்டிருந்தமைதான் அதற்கான காரணமென்றும் தெரிவிக்கப்படுகிறது. ‘பிலாஸ் ஒன்’ என்ற அமெரிக்க விஞ்ஞான சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேற்படி குகையில் சுமார் 28 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.  அப்பகுதியில் வசித்த ஆதிமனிதர்கள் –  இறந்தவர்களின் சடலங்களை  இந்த குகையில் கொண்டுவந்து போடும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், இவை – அந்தச் சடலங்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாமெனவும்  ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இறந்தபிறகு மனித சடலங்களை கொண்டுவந்து – ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசும் அல்லது புதைக்கும்  பழக்கம் – ஆதிமனிதர்களிடம் தோன்றியதன், ஆரம்பகாலத்துக்குரிய சான்றாக, இந்த குகை பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்