“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“

🕔 November 25, 2018

ஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது  எனவும், அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது பற்றி நான் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்கவில்லை. எனது சட்ட வல்லுனர்களிடமே கேட்டேன். நாடாளுமன்ற கலைப்பு பற்றி மூன்று விதந்துரைகள் உள்ளன. நான்கரை வருடங்களுக்கு பின்னர் கலைக்கலாம் என்பது அவற்றில் ஒன்றாகும்.

என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரைத்தான் பிரதமராக நியமிக்க முடியும். சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா ? இல்லை ஏற்கவே மாட்டேன். அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்