தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

🕔 October 23, 2018

– அஹமட் –

லையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை, குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, நாளை புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களும் கலந்து கொள்வதன் மூலம் ஒருமைப்பாட்டினை காட்டுவோம் எனவும் பசீர் சேகுதாவூத் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மற்றும் முற்போக்கு சிங்களவர்கள் தமது ஒருமைப் பாட்டைக் காட்டுவது எக்காலத்திற்கும் தேவையான கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையகத் தோடத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபாவினை வழங்குமாறு கோரி, முதலாளிமார் சம்மேளத்துடன் தொழிற் சங்கங்கள் நடத்திய மூன்று சுற்றுப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையிலேயே, காலி முகத் திடலில் மேற்படி கவன ஈர்ப்புப் போராட்டம், நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments