ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்

🕔 October 11, 2018

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.

நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்பு படையினரை, அநாவசியமாக சிறையில் அடைக்க கூடாது என்ற தொனிப்படவே, நீதிமன்றில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாகவும், குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு கருத்து வெளியிட்டமை தவறாக இருந்தால், மன்னிக்கும்படி அந்த சந்தர்ப்பத்தில் அவர் கோரியதாகவும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments