மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளிவரும்: அமைச்சர் அகிலவிராஜ்

🕔 October 11, 2018

மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என, அமைச்சர் ்அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

“தேர்தலை காலம் கடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மாகாண சபைகளில் குறைகளை வைத்துக் கொண்டு தேர்தலுக்குச் செல்ல முடியாது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்தாபித்த குழுவானது, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பை பிரதமருக்கு அறிவிக்கும். அதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments