50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

🕔 August 29, 2018

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையான 50க்கு 50 என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால்  அந்தக் காலப்பகுதியில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட போதே, அவர் மேற்படி விடயங்களைக் கூறினார்.

“அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே  தினத்தில் நடத்தவே விரும்புகின்றோம்.   அரசாங்கம்  தேர்தலை தாமதப்படுத்துகின்றது என்றால்  அதற்கு கூட்டு எதிரணியும் ஆதரவு வழங்கியே அரசாங்கத்துடன் இணைந்து எல்லை நிர்ணய  அறிக்கையை தோற்கடித்ததுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்

error: Content is protected