40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

🕔 August 25, 2018

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சைபீரியாவில், 100 அடி ஆழத்தில் குதிரையொன்று இறந்து கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனாலும், அது வழக்கத்துக்கு மாறாக வேறு தோற்றத்தில் இருந்ததைக் கண்டமையினால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, சில ஆராய்ச்சியாளர்களுடன் அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், அந்த குதிரையின் உடலை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதை ஆய்வு செய்தபோது, குறித்த குதிரையானது டைனோசர் போலவே முற்றிலும் அழிந்துவிட்ட ‘லென்ஸ்கேவ்’ இனத்தைச் சேர்ந்த குதிரை என்பதும், இது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

பிறந்து இரண்டு  அல்லது மூன்று மாதத்தில் இறந்ததாக கருதப்படும் இந்த குதிரை, பனிப் பிரதேசத்தில் சிக்கியதால், அழுகிப் போகாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது.

அதாவது, தோல் மற்றும் ரோமங்கள் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் பதப்படுத்தப்பட்ட விலங்கைப் போலவே இத்தனை ஆண்டுகாலமாக அப்படியே உள்ளது.

இந்த குதிரையின் தன்மையை குறித்து, மேலதிக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்