கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க ராணுவம் தீர்மானம்

🕔 July 30, 2018

றுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட வெடிபொருட்களைக் கண்டு பிடிப்பதற்கு, சாம்பல் நிற பெண் கீரிப்பிள்ளைகளை, இலங்கை ராணுவம் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் தலைவர் மேஜர் ஜெனரல் ரேனுக ரொவல் தெரிவிக்கையில்; “வெடிபொருட்களை மோப்பம் பிடிக்கும் திறன் கீரிப்பிள்ளைகளுக்கு உள்ளது. மேலும், இதற்காக அவற்றினைப் பயிற்றுவிப்பதும் இலகுவாகும். அதேவேளை, இதற்காக நாயைப் பயன்படுத்துவதை விடவும், கீரிப்பிள்ளைகளை பயன்படுத்துவது பொருத்தமாகும்” என்றார்.

இது தொடர்பான ஆராய்ச்சி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது. இதன்போது வெடிபொருட்களைக் மோப்பம் பிடிப்பதற்கு கீரிப்பிள்ளைகள் பொருத்தமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துக்காக, இதுவரையில் 10 கீரிப்பிள்ளைகளை ராணுவத்தினர் பயிற்றுவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்