தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு

🕔 July 30, 2018
– எம்.என்.எம். அப்ராஸ் –

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான 03 நாள் வதிவிட ஊடக செயலமர்வொன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப் பிரிவு, இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மேற்படி செயலமர்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி.எம். சிசிர குமார தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மொழி பேசும்  இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் முதலாவதாக ஊடகங்களின் மொழிப்பிரயோகம் மற்றும் செய்தி வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி  இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின்  சிரேஷ்ட அறிவிப்பாளர் மயில்வாகனம்சர்வானந்தா விரிவுரை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் அமர்வில்  பத்திரிகைச் செய்தியின் வகைகள், பத்திரிகைகள் செய்திகளை தேர்ந்தெடுத்தலும், அச்சிடும் ஒழுங்குமுறையும் மற்றும் செய்திகளின் தன்மை, செய்தி எழுதுதல் மற்றும் விசேட கட்டுரைகள் தொடர்பாக வீரகேசரி பத்திரிகை ஆசிரியர் ஜீவா சதாசிவம் விரிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வனொலித்துறை மற்றும் தொலைக்காட்சித்துறை வரலாறு, இலங்கையில் வனொலித்துறையின் ஆரம்பம்  மற்றும் அதன் பிரயோகம் பற்றி தமிழோசை வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம். ஜெசீம் விளக்கமளித்தார்.

இறுதி நாள் அமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ. எல். மப்றூக்; ஊடகத்துறையின் வரலாறு மற்றும் ஊடகவியலாளரின் கடமைகள், செய்தி அறிக்கையிடல், ஊடக தர்மம் மற்றும் சுதந்திரம் என்பன பற்றி தெளிவூட்டினார்.

இச் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Comments