தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

🕔 June 26, 2018

ஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த மாதம் 07ஆம் திகதி வரை, தமது வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த  தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Comments