வெளியில் வந்தார் ஞானசார தேரர்

🕔 June 22, 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது.

05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது.

இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான 06 மாதங்களைக் கொண்ட இரண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மறுநாளே ஞானசாரரரின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேன்முறையீட்டு மனு 18ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி நீதிமன்றுக்கு வருகை தராமை காரணமாக, இன்றைய தினத்துக்கு அது – ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இன்றைய தினம் குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேரருக்கு பிணை வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்