தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 1070 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு

🕔 June 17, 2018

பால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு கடந்த 06 நாட்களில் சுமார் 1070 மில்லியன் ரூபாய் (107 கோடி) வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி தொடக்கம், சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியம், வேலை நிறுத்தமொன்றில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 24 ஆயிரம் ஊரியர்கள் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழில் சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அர்ஜுன வர்ணகுலசூரிய இது தொடர்பில் தெரிவித்தார்.

இதன் காரணமாக, மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், 654 தபால் அலுவலகங்கள் மற்றும் 3,410 உப தபால் நிலையங்கள் செயலிழந்துள்ளன.

மேலும், மத்திய தபால்பரிவர்த்தனை நிலையத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள், பொதிகள் உள்ளிட்டவை மலைபோல் குவிந்து கிடப்பதாகவும் தெரியவருகிறது.

Comments