பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

🕔 June 12, 2018

– முன்ஸிப் அஹமட்-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை, உபவேந்தருக்கு ஆதரவான தரப்பினரோ, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வழங்கிய தகவலைக் கொண்டுதான், அமைச்சர் இவ்வாறு பேசியதாகக் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், உயர்கல்வி அமைச்சரின் உரையினை மிக அவதானத்துடன் செவி மடுப்பவர்களுக்கு, அவர் யாரின் அனுதாபி? யாருக்கு ஆதரவாக அந்த உரையினை ஆற்றினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் புரிதலுக்காக, அமைச்சரின் குறித்த உரையில் அடங்கியிருந்த 05 முக்கிய விடயங்களை உங்களுக்காக வழங்குகின்றோம்.

01) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவிய பிரச்சினைகளை இல்லாது செய்வதற்கு, உபவேந்தர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

02) உபவேந்தரின் பணிகளைச் செய்ய விடாது தடுக்கின்றனர்.

03) பல்கலைக்கழகத்தினுள் பாரிய மாபியா ஒன்று காணப்படுகின்றது.

04) முன்னர் இருந்த உபவேந்தர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

05) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு ஆதரவானவர்கள் என, தற்போதைய உபவேந்தர் தரப்பு கூறுகின்றமையும் இங்கு கவனத்துக்குரியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்