கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

🕔 June 10, 2018

சுதந்திர கட்சியின் ஆலோசகராக தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொட்டாவை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களாக முன்ளாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, இந்தத் தெரிவு இடம்பெற்றது.

Comments