மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

🕔 June 4, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.

சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உள்ளது. அதனை அதிகரிக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்துக்கு நாடாளுமன்றில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையினை, ஐக்கிய தேசியக் கட்சி சிதைத்து விட்டது. அரசாங்கத்தின் பெரும்பான்மையினையும் அவர்கள் இல்லாமலாக்குகின்றனர்” என்றார்.

Comments