மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் பங்கேற்பு; 03 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்க கலந்துரையாடல்

🕔 June 1, 2018

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் ஹக்கீம் கலந்து கொண்ட போதே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது,

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இவர்கள் இருவரும் பகிரங்கமாகச் சந்தித்துப் பேசியமை இதுவே முதன்முறையாகும்.

Comments