போதைப் பொருள் கடத்தலுக்கு சவாலாகவிருந்த கோரா மரணம்

🕔 May 29, 2018

– க. கிஷாந்தன்-

கோரா எனும் பெயர் கொண்ட மோப்பநாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இந்த நாய் இருந்து வந்தது.

08 வயதினை கொண்ட கோரா எனும் மோப்ப நாய், கடந்த மூன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளது. சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போது சட்டவிரோதமாக கொண்டு வரபட்ட போதை பொருளை இனங்கண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு, கோரா உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த கோரா என்ற பொலிஸ் மோப்பநாய், மத்திய மாகாணத்திலுள்ள மோப்பநாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு பயிற்சி ஒன்றுக்காக அழைத்து சென்ற போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த மோப்பநாய் அம்பாறை, மட்டகளப்பு மற்றும்  பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவைபுரிந்துள்ளது. இறுதியாக ஹட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் 03 வருடங்களாக சேவை புரிந்துள்ளது.

Comments