கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது

🕔 May 28, 2018

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் (இலங்கை நாணய பெறுமதியில் 15,796 கோடி ரூபாய்) கடனை இலங்கை பெற்றுக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன அபிவிருத்தி வங்கியில் இருந்து எட்டு வருட காலத்துக்கானதாக இந்தக் கடன் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோளகாட்டி ரொயிட்டர்ஸ் செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக இந்த கடன் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடனுக்கு 5.3 சதவீத வட்டி செலுத்தப்படவுள்ளது. மேலும் 03 வருடங்களுக்கான சலுகைக்காலமும் வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் ரொயிட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்