சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார்

🕔 May 27, 2018

டகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, பொதுபல சேனா  அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணி கலாநிதி பிதீபா மகாநாமஹேவ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில், ஞானசார தேரரை குற்றவாளியாக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று அறிவித்தது.

மேலும், ஞானசார தேரருக்கான தண்டனையை எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையிலேயே, மேற்படி குற்றத்துக்காக ஞானசார தேரருக்கு அதிகபட்சம் இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என, சட்டத்தரணி கலாநிதி பிதீபா மகாநாமஹேவ ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

அதேவேளை, குறித்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்