பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

🕔 April 30, 2018

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார்.

பிபிசி இரங்கல்

இது தொடர்பாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் ஜேமி அங்கஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த தாக்குதலை தொடர்ந்து, பிபிசி ஆப்கன் செய்தியாளர் அகமது ஷா இறந்ததை பிபிசி மிகுந்த வருத்தத்துடன் உறுதி செய்கிறது.

29 வயதான அகமது ஷா, பிபிசி ஆப்கன் சேவையில் ஒரு வருடத்திற்கு மேலாகப் பணியாற்றினார். ஏற்கனவே தன்னை மிகவும் திறமையான ஊடகவியலாளராக நிறுவியிருந்த அவருக்கு, ஆப்கான் சேவையில் மிகுந்த மரியாதை இருந்தது.

இது ஒரு பேரிழப்பு. அகமது ஷாவின் நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும், பிபிசி ஆப்கான் சேவைக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தை ஆதரிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என கூறியுள்ளார்.

Comments