பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது

🕔 May 27, 2015

USA - 01

– எஸ்.எம்.எம். றம்ஸான் –

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில்இ நடப்பு சம்பியனான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி – இன்று புதன்கிழமை பண்டாரவளையில் களமிறங்குகின்றது.

இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சுற்றுப் போட்டிக்கு சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இச் சுற்றுப் போட்டியில்இ கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை – இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம்இ கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி – சம்பியனாகத் தெரிவாகியது.

இந்த நிலையில்இ  பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை – கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியுடன் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மோதுகின்றது.

அகில இலங்கை ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளும் இந்தச் சுற்றுப் போட்டியில் – கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரே பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி அக்குரண அல் அஸ்ஹர் கல்லூரி, பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி, புனித அலோசியஸ் கல்லூரி, பலாங்கொட ஆனந்த மைத்திரிய மகா வித்தியாலயம், கல்கிசை புனித தோமஸ் கல்லூரி, பாதுக்க ஸ்ரீ பியரெட்ன மகா வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த மகா வித்தியாலயம், கொழும்பு நாலந்த கல்லூரி, கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி, கொழும்பு வெலுவான கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி, றாகம் பஸீலிகா கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு தேஸ்டன் கல்லூரி, ஹுங்கம விஜயபா கல்லூரி, மத்துகம் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா வித்தியாலயம், வாதுவ மத்திய கல்லூரி, ஹொரண தக்ஸிலா கல்லூரி, கரண்தெனிய மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணக்கல்லூரி, கோட்டே புனித தோமஸ் கல்லூரி, தெஹிவல எஸ்.ரீ.எஸ்.கல்லூரி, மொரட்டுவ புனித செபஸ்தியன்,  ஹேனாகம வித்தியாலயம், கட்டுனேரிய புனித செபஸ்தியான், குருநாகலை மலியதேவ கல்லூரி, நீர்கொழும்பு ஹரிஸ்சந்திரா கல்லூரி மற்றும் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி ஆகிய  பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன.

USA - 02

 

Comments