இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு

🕔 October 24, 2017

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு சமூகத்தவரும் தமக்கு ஏற்றால் போல் ஆட்சி நடத்த முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய சர்வ கட்சி குழுவொன்றினை அமைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, “எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றதாகும். இதனால் அரசியலமைப்பு தொடர்பில் எதுவித தீர்மானத்தினையும் எட்ட முடியாது. அநாவசியமான செலவுகளையே இது ஏற்படுத்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்