கோமாரி விபத்தில் இருவர் பலி

🕔 May 24, 2015

Acctdent - 01– ரி. சுபோகரன் –

கோமாரி 60 ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், இருவர்  பலியானார்கள்.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன், ஊரணிப் பிரதேசத்திலிருந்து பயணித்த மோட்டார் வண்டி மோதியதாகவும், இதன்போது – மோட்டார் வண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரியவருகிறது.

விபத்தில் பலியான இரு இளைஞர்களும் கோமாரிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments