தலைப்புச் செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு, கைத்துப்பாக்கி அபகரிப்பு

Gun shot - 01பொலிஸார் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவர், சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியினையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டியால பிரதேசத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் மீதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குலுக்குள்ளான பொலிஸார் இருவரும் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை அபகரித்துள்ளதோடு, பயணி ஒருவரின் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.