மாற்றுத் திறனாளிகளுக்கான, பாதணி உற்பத்தி பயிற்சிப் பட்டறை

🕔 August 22, 2016

Workshop - AKP - 011
– றிசாத் ஏ காதர் –

மாற்றுத் திறனாகளுக்கான, பாதணி உற்பத்திப் பயிற்சிப் பட்டறையொன்று, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ”INCOME-2016” கண்காட்சியினை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் ஒரு பகுதியாக,  அம்பாறை மாவட்டத்தில்  பாதணி உற்பத்திகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான 10 நாள் பயிற்சிப்பட்டறை நேற்று முன்தினம் சனிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தோல் சார் பாதணி உற்பத்திப் பயிற்சிப் பிரிவினால் இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

இப் பயிற்சிப் பட்டறையில் அதிகளவான  மாற்றுத் திறனாளிகள் பங்குபற்றி வருகின்றனர்.

இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளினால், ஒரு தொகுதி பாதணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Workshop - AKP - 022 Workshop - AKP - 033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்