சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை

🕔 July 22, 2016

Prayer - 086– அஸ்ஹர் இப்றாஹிம் –

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுத்தும் வகையிலும்,  அவ் விவகாரம் தொடர்பில் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்திலும் இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதோடு,  தொழுகையின் பின்னர் விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபைநிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில், இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

சாய்ந்தமருத்துக்குரிய தனியான உள்ளூராட்சிமன்ற  கோரிக்கை மிக நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலின் போது – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வாக்குறுதி வழங்கியிருந்தது. மட்டுமன்றி, கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வந்த மு.காங்கிரஸ் கட்சியினர், பிரதமரைக் கொண்டு, “சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்” என்று வாக்குறுதி வழங்கி வைத்தனர்.

இருந்தபோதும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை இதுவரை உருவாக்கப்படவில்லை. நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்படடுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில்  உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடைய உளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் மிக விரைவில் நடைபெறும் என்கிற அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையிலேயே, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுத்துவதோடு, மக்களைவிழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்தில், இன்று கு த்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டு தொழுகை முடிவடைந்தவுடன்  இறைவனை மன்றாடும்  விதத்திலான விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்குட்பட்ட அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும், இவ்வாறு குத்பா மற்றும் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.Prayer - 085

Comments

புதிது பேஸ்புக் பக்கம்