சமல் விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

🕔 July 22, 2016

Chamal Rajapaksa - 097நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ விரும்வினால், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சுப் பதவி வழங்குவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்

சமல் ராஜபக்ஷ சிறந்த அரசியல் தலைவர். ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியை சமல் வகித்த போது, அவருக்கு போதியளவு ஆதரவு வழங்கப்படவில்லை என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மேலும், சமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, சில தரப்பினர்செயற்பட்டு வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்