முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

🕔 July 23, 2016

Face cover - 01முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்திருந்த ஆண் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் வந்திறங்கும் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை  காலை – இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவருகிறது.

பொலிஸாரிடம் இவர் கூறுகையில்; கட்டார் நாட்டிலிருந்து தனது காதலி, நாட்டுக்கு வருவதாகவும், அவரை ஆச்சரியப்படுத்துவதற்காகவே, இவ்வாறு தான் ஆடை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விசாரணைகளுக்காக இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்