தலைப்புச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Gun shot - 01மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை – திக்வெல்ல நாவரஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது, இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 48 வயதுடைய வில்சன் விக்கிரமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது ரதம்பல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.