Back to homepage

வெளிநாடு

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று மாலை முடிவு

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று மாலை முடிவு

இந்தியாவின் தமி­ழ­கத்தினுடைய அடுத்த முதல்வர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் தமிழக சட்­ட­மன்ற தேர்­தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகின்றன. அந்தவகையில், தமிழகத்திலுள்ள 232 தொகுதிகளுக்­கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமி­ழ­கத்தில் அர­வக்­கு­றிச்சி, தஞ்சை தவிந்த 232 சட்­டப்­பே­ரவை தொகு­தி­க­ளுக்­கான வாக்­குப்­ப­திவு கடந்த 16ஆம் திகதி நடை­பெற்­றது. வாக்­குப்­ப­திவு முடிந்­ததும் மின்னணு இயந்­தி­ரங்கள் சீலி­டப்­பட்டு, வாக்கு

மேலும்...
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

மேலும்...
தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்

இந்தியாவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகிறது. அந்தவகையில் காலை 07 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக – காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பாமக,

மேலும்...
ஓநாய் நோயினால் அவதியுறும் சிறுமி; உலகில் நான்கைந்து பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனராம்

ஓநாய் நோயினால் அவதியுறும் சிறுமி; உலகில் நான்கைந்து பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனராம்

உலகில் நான்கு, ஐந்து பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அரியவகை நோயொன்றினால், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிதி அக்தர் எனும் ஏழைச் சிறுமியொருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 12 வயதான மேற்படி சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ‘ஓநாய் நோய்’ என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார். பிறக்கும்போதே இவரது முகத்தைச்

மேலும்...
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு

பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 09 கிரகங்கள், தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்ற என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், மேற்படி 09 கிரகங்களிலும் சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் உள்ளதாகவும், உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரிய மண்டலத்தைப்

மேலும்...
நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார். 73 வயதான நிஜாமி, டாக்கா சிறைச்சாலையில், மரணிக்கும் வரை தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு

மேலும்...
அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரட்டை

மேலும்...
குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்

மேலும்...
ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

பங்களாதேஷ் பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் பலாத்காரம், புலனாய்வு

மேலும்...