இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

🕔 January 18, 2016

Saudi   - 02
லங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது.

நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது.

குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இத்தகைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவது அந்நாட்டில் வழமைக்கு மாறாது என்கின்ற போதிலும் , தமக்காக இவ்வளவு காலமும் பணியாற்றி , குடும்பத்தில் ஒருவர் போன்று இருந்த குறித்த நபருக்காக, இந்நிகழ்வை மேற்படி அரச குடும்பம் ஏற்பாடு செய்ததாக சஊதி அரேபிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வு ரியாத்திலுள்ள இளவரசர் அப்துல் ரஹ்மான் பின் பர்ஹான் அல் சவுத்தின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் , இதன்போது விதிமுறைகளை தகர்த்து பல அரச குடும்பத்தவர்கள் கலந்துகொண்ட தாகவும் மேற்படி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த இலங்கையர் தான் ஓய்வு பெற தீர்மானித்த தகவலை, குறித்த குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்கள் மனமுடைந்து போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் , தனது எஜமானாரால் தான் சிறப்பாக கவனிக்கப்பட்டதாகவும், குறித்த இலங்கையர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்