அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

🕔 February 12, 2019

மைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டி – குருணாகல் அதிவேகப் பாதையைக் கண்காணிக்கும் கள விஜயமொன்றினை மேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த போது, ஊடகவியலாளர்களுக்கு ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதன்போதே, மேற்படி விடயங்களை அவர் கூறினார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிலர், தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ரஞ்சன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் – தான் தொடர்புகளை வைத்துக் கொண்டதில்லை எனவும் இதன்போது தெரிவித்தார்.

மாகந்துர மதுஷ் கைது செய்யப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீப் ஆகியோர் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் கூறினார்.

Comments