வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை

🕔 January 30, 2019

– முன்ஸிப் அஹமட் –

ட்டாக்காலிகளாக வீதியில் நடமாடிய மாடுகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் இன்று புதன்கிழமை அதிகாலை பிடித்து – தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் மாடுகளை, தாம் பிடிக்கவுள்ளதாகவும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் தண்டம் அறவிடவுள்ளதாகவும் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னரே, இந்த நடவடிக்கையினை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

வீதியில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டம் அறவிடுவதென, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் 12 மாடுகளை தாம் பிடித்து, அடைத்து வைத்துள்ளதாக செயலாளர் பாயிஸ் கூறினார்.

வீதியில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த மாடுகள் வீதியோரத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்களின் முன்னால் கழிவகற்றி அசுத்தப்படுத்தி வருவதும் விசனத்துக்குரியதாகும்.

கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாட்டுக்கும் 03ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்