தெ.கி.பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட ஆராய்ச்சி அமர்வு

🕔 November 15, 2018

– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏழாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு, பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலாநிதி கே. கோமதிராஜின் வழிநடத்தலில் இடம்பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்துகொண்டார். விஷேட பேச்சாளராக அடிப்படை கற்கைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாவித்ரி குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

‘ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திக்கான பல்துறை விஞ்ஞான ஆராய்ச்சி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த அமர்வில், 39 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்