புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை

🕔 October 6, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து

தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்கு இம்முறை தோற்றிய 09 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ் மொழியில், தரம் – 05 புலமைப் பரிசில்

பரீீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 163 ஆக, நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 161, 160, 159, 157, 155, 151 ஆகிய புள்ளிகளை, இந்தப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 07 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்த வகையில், அறபா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு;

  1. எச். பாத்திமா ஹஸ்னா (186 புள்ளிகள்)
  2. ஏ.எச். இப்தா சனானி (182 புள்ளிகள்)
  3. எம். ஹனீக் அஹமட் (181 புள்ளிகள்)
  4. ரி. சிஜோ அஹமட் (173 புள்ளிகள்)
  5. ஐ.எம். சஹ்தி (172 புள்ளிகள்)
  6. எம்.ஜே.எப். வஸீப் (171 புள்ளிகள்)
  7. என்.எப். இபா (171 புள்ளிகள்)
  8. எம்.ஆர்.எப். ரீபா (163 புள்ளிகள்)
  9. ஏ.எம். சம்ஹாத் (163 புள்ளிகள்)

அறபா வித்தியாலயத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வாறு பெருமளவு மாணவர்கள் சித்தியடைந்திருந்த போதிலும், பின்னர் சில வருடங்கள் அந்தத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அறபா வித்தியாலயத்தினை அதிபர் அன்சார் பொறுப்பேற்றதன் பின்னர், மீண்டும் சகல துறைகளிலும் இப்பாடசாலை சிறப்பான முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களை நெறிப்படுத்திய எம்.ஏ. சலாஹுத்தீன் ஆசியருக்கு, அறபா வித்தியாலயத்தின் பெற்றோர் சமூகம், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்