நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

🕔 September 6, 2018

ன்றிணைந்த எதிரணியினர் நேற்றைய தினம் நடத்திய, அரசாங்கத்துக்கு எதிராண பேரணியின் இரண்டாம் கட்டம், கண்டியில் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பேரணியே இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்டதும், அதிக மக்கள் பங்கேற்றதுமான பேரணி எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.

‘மக்கள் பலம் கொழும்புக்கு’ எனும் நேற்றைய எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதென்றும் அவர் கூறினார்.

“நேற்றைய பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை. இந்த எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் இரண்டு லட்சம் பேர் வரை நேற்றைய பேரணியில் கலந்துகொண்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்