தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

🕔 July 28, 2018

– அஹமட் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும்  இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அதிகப்படியான (13) வாக்குகளைப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம் நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் 13 வாக்குகளையும், கலாநிதி றமீஸ்  அபூபக்கர் 11 வாக்குகளையும், கலாநிதி ஏ.எம். ரஸ்மி 10 வாக்குகளையும் பெற்று, முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற மூவரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.

அவர்களில் ஒருவரை, பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments