சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

🕔 July 27, 2018

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“எதிர்க்கட்சித் தலைமைப் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும். அது குறித்து நாம் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகிறோம்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது ஜனநாயக விரோத செயலாகும். மேலும் தற்போதைய எதிர்க்கட்சியானது,  அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போலவே செயற்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் மாத்திரம்தான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை கடந்த வாரமும் சந்தித்து, ஒன்றிணைந்த எதிரணிக்கு எதிர்க்கட்சித் தமலைமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஓகஸ்ட் மாதம் முதல் வாரம் வரையில் சபாநாயகர் அவகாசம் கோரியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்