டின்மீன் விவகாரம்: சீனப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார், அமைச்சர் றிசாட்

🕔 July 11, 2018

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்; நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் மற்றும் சீன தூதரகம், சுங்கத் திணைக்களம், இறக்குமதியாளர்கள் இலங்கை நியமங்கள் நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அனைத்து பங்குதாரர்களும்  இச்சந்திப்பில் இணைந்துக்கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

நாளாந்த வாழ்க்கை செலவினத்தை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான அம்சமாக விளங்கும் டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள், உள்ளூர் நுகர்வோரால் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றது.

60 இலங்கை நிறுவனங்கள் – வருடத்திற்கு 40 மில்லியன் கிலோவினை உள்ளூர் சந்தைக்கு இறக்குமதி செய்கின்றன. சீனாவில் இருந்து டின்களில் அடைக்கப்பட்ட மீன் விநியோகத்தினை 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ளவில்லை.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட மீன்களில் புழுக்கள் இருந்தமையை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்ததோடு, சுங்கத்தினால் இறக்குமதிகள் தடுத்து வைக்கப்பட்டதாக செய்தி ஊடங்களில் பரவலாக பதிவாகியது. சில டின்கள் மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக, பிப்ரவரி மாதம்முதல்  உள்ளூர் துறைமுகங்களில் உள்ளூர் சந்தைகளுக்கு என இறக்கப்பட்ட டின் மீன்களில் சில  சிதைந்த மற்றும் தகுதியற்றவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

சீன விநியோகஸ்தர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  
31 சரக்குகளில்  03 ஒட்டுண்ணி பரவி இருந்ததையடுத்து உள்ளூர் சந்தைகளுக்கு இவற்றினை விடுவிப்பது தகுதியற்றது என, இலங்கை நியமங்கள் நிறுவனமும் மற்றும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு திணைக்களமும் இணைந்து  தீர்மானித்தன. 0 முதல் மூன்று வரையிலான இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் இந்த சரக்குப் பொருட்கள் அதிக அளவு ஒட்டுண்ணிகள் இருந்தன.

92 கொள்கலன்களில், சீன விநியோகஸ்தர்களிடமிருந்து  டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் வந்து சேர்ந்தது. அத்துடன் 80 கொள்கலன்கள் சான்றிதழ் வழிமுறைகளை அடிப்படையாக கொண்டு இலங்கை அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டது. எங்கள் அதிகாரிகள் தங்கள்  கடமைகளை சரியாக செய்துள்ளனர். இருப்பினும், டின்களில்அடைக்கப்பட்ட மீன் இறக்குமதியின் முழுயான நிறுத்தம் எங்கள் நுகர்வோரை பாதிக்கும். அதேவேளை சந்தையில் பற்றாக்குறையும் ஏற்படலாம்.

சீன அரசாங்கத்தின் ஆதரவை நாங்கள் கோர விரும்புகிறோம். சிநேக பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் இந்த சூழ்நிலையைத் தீர்ப்பதற்கு சீன அதிகாரிகள் எங்களை ஆதரிப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த பிரச்சினையை எதிர்கொண்ட தங்களுடைய சொந்த ஏற்றுமதியாளர்கள் எமது சுகாதாரத் தரங்களை கருத்திற்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க, சீன அரசாங்கத்தின் ஆதரவை நாங்கள் அழைக்க விரும்புகிறோம்.

சீன சுகாதார அதிகாரிகள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ள எங்களது சுகாதாரத் தரத்தை பூர்த்தி செய்ய, எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் தரத்துக்கு இணங்க, எங்கள் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்க அதிகாரிகளாகிய நாங்கள் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சீனாவிலிருந்து இலங்கைக்கு டின்களில் அடைக்கப்பட்டமீன்  விநியோகம் செய்யும் சீன பிரதிநிதிகளை நாங்கள் அழைக்கிறோம். அதன் பின்னர் இறுதி முடிவுக்கான சந்திப்புக்கு இலங்கை இறக்குமதி பிரதிநிதிகளை  பீஜிங்கிற்குஅனுப்புவோம்” என்றார் அமைச்சர்.

இலங்கை டின்களில் அடைக்கப்பட்ட மீன் சங்கத்தின் செயலாளர் சத்துர விக்கிரமநாயக்க அமைச்சரின் கருத்துக்களுக்கு உடன்பட்டார்.

சீனாவில் பெருமளவிலான ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். சில சமயங்களில் இவ்வாறு தற்செயலாக ஒரு முறை நடக்கலாம்.   22 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இதேபோல நடந்தது. ஆனால் அவை சிலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீனகள். கடந்த 08 ஆண்டுகளாக நாங்கள் சீனாவில் இருந்து மீன் இறக்குமதி செய்து வருகிறோம். சில நேரங்களில் சில கெட்டுப்போன டின்கள் கலவையானவை தவிர,  சீன பொருட்கள் மோசமானவையல்ல.

சீன ஏற்றுமதியாளர்கள் இப்போது படிப்படியாகவும், நம்பகமான விநியோகஸ்தர்களாகவும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என செயலாளர் விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார்.

“டின்களில் அடைக்கப்பட்ட மீன் இறக்குமதிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இலங்கை நியமங்கள் நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் கூறினர்.   ஆனால் இலங்கைக்கு ஏற்றுமதியாளர்களாக இருந்தால் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடின் நிலையான கொள்முதல் முறைமை மீறல்ஏற்படலாம். இதனால் எமது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

“இரு நாடுகளின் நலனுக்காக தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இலங்கை அதிகாரிகளிடமிருந்து மேலும் தெளிவுபடுத்தல்களுக்கான ஆவணங்கள் வர்த்தக தீர்வுகள் பிரிவுக்கு தேவைப்படுகின்றது. எமது ஏற்றுமதியாளர்களுக்கு சரி பார்ப்பதற்கு ஒரு இடைநிலை காலத்திற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்ற அதேவேளை, இலங்கையின் திருத்தப்பட்ட தரத்திற்கு நாங்கள் உடன்படுகிறோம்.

தற்போது நாங்கள் எங்கள் சீன விநியோகஸ்தர்கள்  மற்றும் சீன சம்மேளனங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். அனைத்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இலங்கை இறக்குமதியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்தப்பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் கூறினார்.

வர்த்தகத் திணைக்களத்தின் அறிக்கையின் படி, சீனாவில் இருந்து டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி சமீபத்திய ஆண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. 2013 ஆம்ஆண்டில் 02 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2014 ஆம் ஆண்டில் 4.85 மில்லியன்  டொலராகவும், 2015 ஆம் ஆண்டில் 9.65 மில்லியன் அமெரிக்க டொலராகவும், 2016ஆம் ஆண்டில் 16.85 மில்லியன் அமெரிக்க டொலராக ஒரு பெரிய அதிகரிப்பை காட்டிள்ளது.   

Comments

புதிது பேஸ்புக் பக்கம்