படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

🕔 June 22, 2018

விசேட அதிரடிப்படையினருக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் – சந்தை பெறுமதியிலும் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

33 மில்லியன் ரூபாவுக்கு மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கொள்வனவு ஆணைக்குழுவுக்கு தெரிந்தே, மேற்படி சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தகாரரை தெரிவு செய்வதற்கான கேள்வி அறிவித்தலின் போது, குறைந்த விலையில் கேட்டவர் நிராகரிக்கப்பட்டு, அதிக விலைக்கு கேட்டவருக்கு மேற்படி பொருட் கொள்வனவுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்