ஐ.தே.கட்சிக்கு மேலும் 06 பிரதியமைச்சர் பதவிகள்; பெயர்களும் வெளியாகின

🕔 June 10, 2018

க்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, லக்கி ஜெயவர்தன, ரஞ்சித் அலுவிஹார, அஜித் மான்னப்பெரும, எட்வட் குணசேகர ஆகியோர் உள்ளிட்ட ஆறு பேருக்கே மேற்படி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி அரச நிர்வாக முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு, தோட்ட உட்கட்டமைப்பு, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் வணிகம், மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான பிரதி அமைச்சர் பதவிகளே வழங்கப்படவுள்ளன.

அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தெரிவுகளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்