புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

🕔 April 28, 2018

புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்தாகக் கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 08 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

ஸ்கேன் கருவிகள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். என காவற்துறை தெரிவித்துள்ளது.

வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments