குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிக்கை விடுப்பு

🕔 March 11, 2024

லங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதேபோன்ற – அடையாளம் காணப்பட்ட மற்றும் தேடப்படும் ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராகவும் சிவப்பு நோட்டீஸ்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் தஞ்சம் புகுந்திருந்த தேடப்படும் குற்றவாளிகள் – தற்போது வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, துபாய்க்கு தப்பிச் சென்ற தேடப்படும் குற்றவாளிகள், போலி அடையாளங்களில் புதிய ‘பாஸ்போர்ட்’டை உருவாக்கி, வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்