மற்றொரு அகதிகள் முகாமில் இஸ்ரேல் மனித வேட்டை: 30க்கு மேற்பட்டோர் படுகொலை எனத் தெரிவிப்பு

🕔 November 5, 2023

த்திய காஸாவில் உள்ள அல் – மகாசி அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா (Wafa) அறிவித்தது. இவர்களில் அதிகமமானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.

200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஜபாலியா மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் நடந்து – சில நாட்களுக்குப் பிறகு, அல் மகாசி அகதிகள் முகாம் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

உடனடி போர்நிறுத்தத்திற்கான அரபு நாடுகளின் அழைப்புகளை அமெரிக்கா சனிக்கிழமை நிராகரித்த பின்னர் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஒரு முழு போர்நிறுத்தம் “ஹமாஸை மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் தாக்குதல்களை நடத்துவதற்கு இடமளிக்கும்” என, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் – தனது ஜோர்டானிய மற்றும் எகிப்திய சகாக்களுடன் அம்மானில் நடந்த ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

பலஸ்தீன ஆயுதக் குழுவால் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் 240க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் விடுவிக்கப்படாவிட்டால், தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்வதை – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நிராகரித்தார்.

பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹமாஸை ஒழிப்பதற்கான தனது பிரச்சாரத்தை இஸ்ரேல் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 9,488 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது, குறைந்தது 1,430 பேர் கொல்லப்பட்டனர். 240 க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்